Tuesday, September 4, 2007

அவள்தான் என்னவள்.........


என் நினைவில் உருவானவள்!
மெல்லிய உருவமானவள்! - அவள்
தேகத்தில் என்றென்றும் மோகம் - என்
வேகத்தில் தீர்கின்றேன் தாகம்!
என் இம்சைகளை அடக்கி - அவள்
அகிம்சைகளைக் கடைபிடிகின்றாள்!
அவள் கண்ணீரில் புதுபுது கவிதை எழுதுகிறேன்! இது உண்மை, அவள் எனக்குள் அடங்குகிறாள்,
நான் அவளை ஒழித்துவைக்கின்றேன்,
கயவர் பூமி யாருக்கும் அவள்மீது காதல் வரும் என் நினைவுள்ளவரை மறப்பேனா???
அவள்தான் .... அவள்தான்...
என்பேனா!!!!!!

தோழியே



உனது உயர்வு
"உழைப்பிற்க்கு அடையாளம்"
உனது அறிவு
"படிப்பிற்கு அடையாளம்"
உனது புகழ்
" உனது ஈகைக்கு அடையாளம்"
உனது மகிழ்ச்சி
"நல்ல மனதிற்க்கு அடையாளம்"
உனது நற்பெயர்
"உனது ஒழுகத்திற்க்கு அடையாளம்"
உனது நல்ல பெண்தோழி
" உன் நற் பண்பிற்க்கு அடையாளம் "

என் தமிழே!



என் தமிழே!
அழகிய அமுதே!
என் ஆயுலில் நீண்ட தொடர்பே!

என் உயிர் என்னை மறப்பினும் மறவா உயிர்கலப்பே!

உலகமே எனக்கு நீயே தாயே!

என் எழுத்தில் பிழை வருவின் - உன்
பிள்ளை நானென்று வந்து - என்
பிழை தீர்ப்பாய் தமிழே!

எனது விருப்பம்



இலக்கியம் படிக்க விருப்பம்!!!!
இந்தியாவில் நானும் குடிமகன் என்பதை தெரிவிக்க விருப்பம்!!!


இலங்கையில் அமைதியைக் காண விருப்பம்!!!!
இளம் குழ ந்தையின் குரல் கேட்க விருப்பம்!!!!!


இளம் கன்னியரைக் காண்பதும் விருப்பம்!!!!


இனிய காதல் கொள்ளவும் விருப்பம்!!!!!!


இதை காணாததால் உள்ளது சிறு வெறுப்பும்!!!!


இனியும் நடக்கும் என்ற நம்பிக்கையோடு


என்றும் இருப்போம்!!! இருப்போம்!!!!!!!







கருப்பு நிலா" முருகேசன்